உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்வேலியில் சிக்கி இறந்த மானை சமைத்து ருசித்த 2 பேர் கைது

மின்வேலியில் சிக்கி இறந்த மானை சமைத்து ருசித்த 2 பேர் கைது

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் தலைமையில் வனத்துறையினர், நேற்று முன்தினம், முல்லைவாடியில் ஆய்வு செய்தனர். அப்போது விதைப்பண்ணை வடக்கு பகுதியை சேர்ந்த துரைசாமி வீட்டில் சமைத்து வைத்திருந்த மான் இறைச்சி, சமைக்காமல் வைத்திருந்த அதன் இறைச்சி, தோல், வலை, மின்வேலி கம்பியை பறிமுதல் செய்தனர்.மேலும் மான் இறைச்சியை, 'ருசி' பார்த்த துரைசாமி, 59, கல்லாநத்தம், பனஞ்சாலையை சேர்ந்த, சக்திவேல், 50, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான துரைசாமி மகன் மணிகண்டனை தேடுகின்றனர்.இதுகுறித்து ரவிபெருமாள் கூறுகையில், ''முல்லைவாடி, விதைப்பண்ணை பகுதியில், விவசாய நிலத்தில் போடப்பட்ட மின் வேலியில் சிக்கி புள்ளி மான் இறந்துள்ளது. அந்த மானை எடுத்துச்சென்று சமைத்துள்ளனர். வேலி குறித்து மின் வாரியத்துறைக்கு மேல்நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை