உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோளம், நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அழைப்பு

சோளம், நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பனமரத்துப்பட்டி : சோளம், நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்-பட்டுள்ளது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், காரீப் - 2024 பரு-வத்தில் சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு ஆக., 16 வரை, காப்-பீடு செய்யலாம். ஒரு ஏக்கர் சோளத்துக்கு, 194 ரூபாய், நிலக்கடலைக்கு, 421 ரூபாய் பிரிமீயம் செலுத்த வேண்டும். விவசாயிகள் பூர்த்தி செய்-யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு புத்தகத்துடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களில் பிரிமீய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை