| ADDED : ஜூலை 04, 2024 07:26 AM
சேலம், : தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சேலம், 4 ரோட்டில் உள்ள, சிறுமலர் துவக்கப்பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்-பாளர் மதியழகன் தலைமை வகித்தார். அதில் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை எண்: 243ஐ ரத்து செய்யக்-கோரி கோஷம் எழுப்பினர். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலர் ஜான் பேசுகையில், ''60 ஆண்டுகளாக இருந்த பணிமூப்பு பட்டியலை, 243 அரசாணையை பயன்படுத்தி, மாநில அளவில் மாற்றம் செய்-துள்ளனர். இதனால் ஆசிரியர்களுக்கு இடம் விட்டு இடம் மாறு-தலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்,'' என்றார். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரி-யர்கள் பலர் பங்கேற்றனர்.