உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நம்ம ஸ்கூல், நம்ம ஊரு கலெக்டர் துவக்கிவைப்பு

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு கலெக்டர் துவக்கிவைப்பு

இடைப்பாடி : கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நம்ம ஸ்கூல், நம்ம ஊரு' திட்டத்தில், இந்துஜா லேலண்ட் நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமை வகித்தார். அதில் கலெக்டர் பிருந்தாதேவி, அத்-திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி அப்பள்-ளியில் படிக்கும், 523 மாணவர்களுக்கு, மாவட்ட மாசு கட்டுப்-பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பைகளை வழங்கினார்.தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 124 பள்ளிகளில், 93 சிறப்பு பயிற்றுனர்கள் மூலம், 1 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்க-ளுக்கு சிறப்பு வகுப்புகள், சமூக களப்பணியாளர்கள் மூலம், சுத்தம், சுகாதாரம் சார்ந்து வாழ்வியல் கல்வி விளையாட்டு, பயிற்-றுனர்கள் மூலம் உடற்பயிற்சி வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் மூலம் கிராமப்புற, வேலைவாய்ப்பற்ற, படித்த இளைஞர்க-ளுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை