உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கள்ளக்குறிச்சி தொகுதி இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் வைத்து சீல்

கள்ளக்குறிச்சி தொகுதி இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் வைத்து சீல்

ஆத்துார்:கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சேலம் மாவட்டம் தலைவாசல், வி.கூட்ரோடு அருகே உள்ள அ.வாசுதேவனுார் மகா பாரதி பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு தனித்தனி அறைகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து, நேற்று வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பூட்டப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார், பொது பார்வையாளர் அசோக்குமார் முன்னிலையில், 'சீல்' வைத்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில், மத்திய பாதுகாப்பு படை, போலீசார் உள்பட, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும்படி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி