| ADDED : ஜூலை 06, 2024 06:54 AM
சேலம் : மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுதும் வக்கீல்கள், நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் அஸ்தம்-பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், கையில் கறுப்பு துணி கட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். திரளான வக்-கீல்கள், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட, போலீசார் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினர்.இதுகுறித்து விவேகானந்தன் கூறுகையில், ''மக்களுக்கும், வக்கீல்-களுக்கும் பாதிப்பு எற்படுத்தும் புது சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் தொடர் பேராட்டம் நடத்தப்படும்,'' என்றார். இதில் செயலர் நரேஷ்பாபு, பொருளாளர் அசோக்குமார், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில், தலைவர் இமயவர்மன் தலைமையில் வக்கீல்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சங்ககிரி, ஆத்துாரில் நீதி-மன்ற வளாகம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.