உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம்

துப்பாக்கி சுடும் போட்டி மாநகர கமிஷனர் முதலிடம்

சேலம்: சேலம் மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி, சூரமங்கலம் அருகே நகரமலை அடி-வாரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. எஸ்.பி., அருண்கபிலன் தொடங்கி வைத்தார்.நேற்று, எஸ்.பி.,க்கு மேல் உள்ள ரேங்கில், 9 எம்.எம்., துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் முதல் மூன்று இடங்கள் முறையே, சேலம் மாநகர கமிஷனர் பிரவீன்குமார் அபி-னபு, ஈரோடு எஸ்.பி., ஜவகர், சேலம் எஸ்.பி., அருண் கபிலன் பெற்றனர். அதேபோல், 'இன்சாஸ்' ரக பிரிவில் பிரவீன்குமார் அபினபு, ஜவகர், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர், முதல் மூன்று இடங்களை பெற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ