உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடையில் தொழிலாளி சடலமாக மீட்பு

ஓடையில் தொழிலாளி சடலமாக மீட்பு

சேலம்: சேலம் புது ஏரி ஓடையில் விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்-பட்டார்.சேலம் வீராணம் அருகே, கொத்துக்காரன் வட்டத்தை சேர்ந்தவர் சங்கர், 48, கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது, நேற்று முன்தினம் இரவு அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு, 12:30 மணியளவில் அங்குள்ள ஓடையில் சங்கர் விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். கனமழையால் ஓடையில் தண்ணீர் அதிகமாக சென்றதால், அவரை மீட்க முடியவில்லை.வீராணம் போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஓடையில் சங்கரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடிய-வில்லை. இந்நிலையில் நேற்று காலை சங்கர் விழுந்த இடத்தில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் உள்ள புது ஏரிக்கு செல்லும் ஓடையில் சங்கர் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். ஓடையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்-லது தவறி விழுந்தாரா என்பது குறித்து வீராணம் போலீசார் விசா-ரணை மேற்கொண்டு வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ