உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயியை டீ வாங்கி வரும்படி அலைக்கழித்த கூட்டுறவு ஊழியர்

விவசாயியை டீ வாங்கி வரும்படி அலைக்கழித்த கூட்டுறவு ஊழியர்

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளது. அங்கு காமராஜர் நகரை சேர்ந்த விவசாயி மணிவேல், 40, நேற்று நகையை வைத்து, பயிர் கடன் வாங்க வந்தார். அப்போது அங்குள்ள பணியாளர்கள், 'டீ', வடை வாங்கி வரும்படி, மணிவேலிடம் கூறினர். அவர், 3 முறை கடைக்குச்சென்று பணியாளர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சங்க செயலர் முத்தையன் கூறுகையில், 'நகை மதிப்பீட்டாளருக்கு தலைவலியால், 'டீ' வாங்கி வர அறிவுறுத்தினார். இதை அறிந்த பின், நகை மதிப்பீட்டாளர், பணியாளர்களை எச்சரித்தேன். இனி இதுபோன்று நடக்காது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !