உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 109 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

109 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

சேலம்:தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு கலந்தாய்வு, கடந்த 8ல் துவங்கியது.நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு, சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில் பங்கேற்க, 721 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 542 பேர் பங்கேற்றனர்.அதில், 109 பேர், விருப்ப இடத்தை தேர்வு செய்து இடமாறுதல் பெற்றனர். அவர்களுக்கான ஆணையை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வழங்கினார். இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு துவங்கி, வரும், 20 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ