உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உழவர் சந்தைகளில் ரூ.1.35 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.35 கோடிக்கு விற்பனை

சேலம்: சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட, மாவட்-டத்தில், 13 உழவர்சந்தைகள் உள்ளன. ஆடி அமாவாசையான நேற்று முன்னோர்க்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபட உகந்தது என்பதால், காலை, 5:00 மணி முதலே உழவர்சந்தை-களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. இதில், 263 டன் காய்கறி, 48 டன் பழ வகைகள், பூ, வாழை இலை உள்-பட, 323 டன் அளவிலான பொருட்கள் மூலம், 1.35 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி