உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 19ல் அஞ்சல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

19ல் அஞ்சல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

சேலம்: சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட அலுவலக நிர்வாக அறிக்கை:ஓய்வூதியம் பெறும் அஞ்சல் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கேட்டு தீர்வு காண, ஜூலை, 19 காலை, 11:00 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதிய குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தலைமை வகிப்பார். குறைகள் இருப்பின், ஓய்வூதியதாரர்கள், அருகே உள்ள தபால் அலுவலகத்தில் கொடுத்தோ அல்லது தபால் மூலமோ, 'முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்' என்ற முகவரிக்கு, ஜூலை, 12க்குள் குறைகளை அனுப்ப வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை