உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 270 மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

270 மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

சேலம்: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-4க்கான தேர்வு இன்று நடக்கிறது.சேலம் மாவட்டத்தில் மொத்தம், 1,06,082 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதற்காக, 270 தேர்வு மையங்களில், 361 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காலை, 9:30 மணிக்கு தொடங்கி மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது.தேர்வெழுத காலை, 9:00 மணிக்குள் வருவோர் மட்டும், தேர்வு கூடத்தில் அனுமதிக்கப் படுவர். அதன்பின் வருவோருக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்வர்கள் தங்களுடைய அனுமதி சீட்டை அவசியம் கொண்டு வர வேண்டும். தேர்வு மையம், தேர்வர்களை கண்காணிக்க, 5,310 கண்காணிப்பாளர், 361 தலைமை கண்காணிப்பாளர், 89 நடமாடும் கண்காணிப்புக்குழு, 20 பறக்கும் படையினர், 14 கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுகின்றனர். தேர்வாணைய விதிமுறைக்கு ஏற்ப வினா, விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், நுழைவுசீட்டு சரிபார்த்தல் போன்றவை முறையாக மேற்கொள்ளப்படும். தேர்வு மையத்துக்கு செல்ல வசதியாக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதுடன், நடைபெறும் தேர்வை வீடியோ பதிவு செய்யப்படுகிறது. தடையில்லா மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.விதிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்வை நேர்மையாகவும், சிறப்பாக நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் டவுன், மப்ஸல் பஸ்களுடன் கூடுதலாக, 32 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை காலை, 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ