| ADDED : ஆக 04, 2024 01:16 AM
தாரமங்கலம், மேட்டூர் அணை உபரிநீர் மூலம், 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில், 10வது ஏரியாக தாரமங்கலம் ஏரி நிரம்பும். அந்த ஏரி நிரம்பி வெளியேறும் நீர், அடுத்த ஏரியான குறுக்குப்பட்டி ஏரிக்கு செல்ல, கால்வாய் துார்வாரும் பணியை, பொதுப்பணி, வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர். இதில் தற்போது ஏரியில் இருந்து வேடப்பட்டி சாலையில் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் அப்பகுதி மக்கள், தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்தனர். தொடர்ந்து போலீசாரிடம், 'ஏரியில் இருந்து உபரிநீர் செல்ல மூன்று நீர்வழிப்பாதை உள்ளன. ஆனால் எங்கள் குடியிருப்பு பகுதியில் மட்டும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 கால்வாயும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, போலீசில் மனு அளித்து சென்றனர்.