மேலும் செய்திகள்
ரூ.13 லட்சத்துக்கு 67 வாகனங்கள் ஏலம்
01-Mar-2025
பறிமுதல் வாகனங்கள்ரூ.4.16 லட்சத்துக்கு ஏலம்சேலம்:சேலம் மாவட்டத்தில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2017 முதல், 2025 வரை, கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட, 25 வாகனங்களை பறிமுதல் செய்து, நேற்று பொது ஏலத்தில் விட்டனர். சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், டி.எஸ்.பி., வடிவேலு தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் ஏலம் நடந்தது. 79 பேர் ஏலம் கோரினர். அதில், இரு சக்கர வாகனம் - 19, மூன்று சக்கர வாகனம் - 1, நான்கு சக்கர வாகனம் - 5 என, 25 வாகனங்கள், 4.16 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது. அதற்கு தனியே, 66,942 ரூபாய், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது என, போலீசார் தெரிவித்தனர்.
01-Mar-2025