உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறு ஜவுளி பூங்கா நிறுவினால் 50 சதவீத மானியம் பெறலாம்

சிறு ஜவுளி பூங்கா நிறுவினால் 50 சதவீத மானியம் பெறலாம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் சிறு ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்கப்படுத்த, தமிழக அரசு, 2.50 கோடி ரூபாய் வரை நிதி வழங்குகிறது.குறைந்தபட்சம், 3 தொழிற்கூடத்துடன், 2 ஏக்கரில் அமைக்க வேண்டும். அதற்குரிய நிலம், சாலை, சுற்றுச்சுவர், கழிவுநீர் கால்வாய், நீர் வினியோகம், தெரு விளக்கு, மின் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலை தொடர்பு வசதி உள்ளிட்டவை இருக்க வேண்டும்.அத்துடன் ஆய்வு கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி, வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர் விடுதி, அலுவலகம் உள்ளிட்ட இதர இனங்கள், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடம், இயந்திரம், தளவாடம் ஆகிய உட்பிரிவு கொண்டதாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் நிலம், இயந்திரம், தளவாடம் தவிர்த்து பிற இனங்கள் அரசு மானியம் பெற தகுதியான முதலீடாக கருதப்படும்.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மண்டல துணை இயக்குனர், துணி நுால் துறை, சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம்' என்கிற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், 05427 - 2913006 என்ற எண், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இதுதொடர்பாக தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்