உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை

முதல்வர் திறனறி தேர்வு 541 பேர் வரவில்லை

சேலம், தமிழக முதல்வர் திறனறி தேர்வு, சேலம் மாவட்டத்தில், 25 மேல்நிலைப்பள்ளி மையங்களில் நேற்று நடந்தது. காலை, 10:00 முதல், 12:00 வரை; மதியம், 2:00 முதல் மாலை, 4:00 மணி வரை என, இரு கட்டமாக தேர்வு நடத்தப்பட்டது. காலையில் கணிதம், மாலையில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, தலா, 60 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடந்தது. பிளஸ் 1 மாணவ, மாணவியர், 5,937 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 5,397 பேர் தேர்வு எழுதினர். இது, 90.90 சதவீதம். 354 மாணவர், 187 மாணவியர் என, 541 பேர் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை