உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்கம்பி மீது சாய்ந்த மரம் அசம்பாவிதம் தவிர்ப்பு

மின்கம்பி மீது சாய்ந்த மரம் அசம்பாவிதம் தவிர்ப்பு

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, சின்னம்பட்டி பிரதான சாலையில் ரூபம் சில்க் அருகே சாய்ந்த நிலையில் புளியமரம் இருந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, சில குரங்குகள், அந்த மரத்தில் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது மரம் மின்கம்பியில் சாய்ந்தது. மக்கள் உடனே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள், மின்சாரத்தை நிறுத்தி மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அருகே பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மின்கம்பியின் கீழ், 50க்கும் மேற்பட்ட பயணியர் நின்றிருந்தனர். மின்கம்பி அறுந்து விழாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை