| ADDED : ஜூலை 01, 2024 03:42 AM
காரிப்பட்டி: அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆலடிப்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி கந்தசாமி, 40. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே, 'ஸ்பிளண்டர்' பைக்கில் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஜெய்ஹிந்த், 25, என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது. இதில் கந்தசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.அதேபோல் மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்தவர் தமிழரசி, 63. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த, 'பல்சர்' பைக், தமிழரசி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார்.இரு சம்பவங்கள் குறித்தும் காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.