| ADDED : ஜூன் 17, 2024 12:59 AM
வீரபாண்டி: பார்த்தினீய செடிகளில் மண்புழு உரம் தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:பார்த்தினீய செடி அனைத்து தரப்பு உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வயல்களில் இதை கட்டுப்படுத்துவது முக்கிய பணி. பாதிப்பை ஏற்படுத்தும் இச்செடியால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்த முடியும். இந்த வகை செடிகளில் பூ பூக்கும் பருவத்துக்கு முன் தேவையான அளவு சேகரித்து, அதை, 510 செ.மீ., நீள வாக்கில் நறுக்கி, 10 செ.மீ., சுற்றளவில் 10 செ.மீ., உயரம், 5 செ.மீ., அகலத்தில் அடுக்க வேண்டும். அதன் மீது, 10 சதவீத மாட்டு சாணத்தை கரைத்து சமமாக தெளித்து, 10 நாட்கள் அப்படியே மட்க செய்ய விட்டு விட வேண்டும். 5 நாட்கள் கழித்து, 250 முதல், 300 மண் புழுக்களை மட்கிய உரம் மீது விட வேண்டும். இதை அப்படியே மீண்டும், 45 முதல், 60 நாட்கள் வரை வைத்தால் பார்த்தீனிய விஷம் குறைந்து உரமாக மாறி விடும். இதில், 1:15 தழைச்சத்து, 0.44 மணிச்சத்து, 0.97 சாம்பல் சத்து உள்ளது. பயிர்களுக்கு தேவையான அளவு இந்த மண்புழு உரத்தை பயன்படுத்தி லாபம் பெறலாம்.