உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு ஆரம்பம்

ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு ஆரம்பம்

மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில், ஓராண்டு, 'நீட்' பயிற்சி வகுப்பு, நேற்று முதல் தொடங்கியது. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் படிக்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதல்வர் மற்றும் டீனாக பணிபுரிந்த சேசுக்குமார், இப்பள்ளியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற இணைந்துள்ளார். அவருடன் அனுபவமிக்க ஆசிரியர்களான இயற்பியல் துறைத்தலைவர் மோகன முரளி, இயற்பியல் ஆசிரியர்கள் கோவர்தன், ரமேஷ், வேதியியல் துறைத்தலைவர் சீனிவாச ஐயர் மற்றும் ஆசிரியர் கர்ணன், உயிரியல் துறைத்தலைவர் உமாராணி மற்றும் ஆசிரியர்கள் அருள்பிரகாஷ், ஆறுமுகசாமி ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளனர்.தாளாளர் முத்துசாமி, பயிற்சி வகுப்பை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 'நீட்' நுழைவுத்தேர்வில் வெற்றி பெற, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, ஏ.கே.வி., பள்ளி முதல்வர் பழனிவேல், ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வகுப்பை தொடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை