உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அநாகரிகமாக நடக்கும் அண்ணாமலை மா.கம்யூ., மாநில தலைவர் பேட்டி

அநாகரிகமாக நடக்கும் அண்ணாமலை மா.கம்யூ., மாநில தலைவர் பேட்டி

சேலம்: ''அண்ணாமலை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தலைவர்களை தாக்கி பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்,'' என, மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.இதுகுறித்து சேலத்தில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.,வுடன், பா.ம.க., ஒவ்வாமை கூட்டணி வைத்துள்ளது. வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் கட்சியாக, பா.ஜ., உள்ளது. வர்ணாசிரமத்தை எதிர்க்கும், பா.ம.க., அக்கூட்டணியை எப்படி ஆதரிக்கிறது என தெரியவில்லை. 'இண்டியா' கூட்டணி, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும், 2ம் இடத்துக்கு தான் போட்டி போடுகிறது. அதிலும், அ.தி.மு.க., பல கூறுகளாக பிரிந்துள்ளது. இதனால் தேர்தல் தோல்வி, அவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.வட மாநிலங்களிலும், பிரதமருக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. தென் மாநிலங்களில் ஒன்றிரண்டு சீட்களில் தான் வெற்றி பெற முடியும். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பது வேடிக்கை. தேர்தலுக்கு பின், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.அரசியலில் பண்பாடு, கலாசாரத்தை மீறி தனிப்பட்ட விமர்சனத்தை வைப்பது நாகரிகமல்ல. அண்ணாமலை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தலைவர்களை தாக்கி பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். சேலத்தில் முன்னாள் அமைச்சரான, மறைந்த ஆறுமுகத்தை ரவுடி கும்பலின் தலைவர் போல் பேசியுள்ளார். இது நல்லதல்ல. இப்போக்கை கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்