உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரி ஏய்ப்போரை கண்டறிய தெரு தணிக்கை முறை ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு வேண்டுகோள்

வரி ஏய்ப்போரை கண்டறிய தெரு தணிக்கை முறை ஒத்துழைப்பு அளிக்க வணிகர் சங்கத்துக்கு வேண்டுகோள்

சேலம்: ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை செம்மைப்படுத்த, தமிழக வணிக வரித்துறை சார்பில், கடந்த, 26ல், 'தெரு தணிக்கை முறை' தொடங்கப்பட்டுள்ளது. சேலம் கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் மகேஸ்-வரி(மாநில வரிகள்), சேலம், நாமக்கல் மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடித விபரம்: ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை செம்மைப்படுத்த, தமிழக வணிக வரித்துறை சார்பில், கடந்த, 26ல், 'தெரு தணிக்கை முறை' தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வணிக வரித்துறை அலுவலர்கள், ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு முகவரியை பரி-சோதிப்பர். இந்த தணிக்கையின் போது, முறையாக பதிவு சான்று பெற்று, மாதாந்திர நமுனாக்களை தாக்கல் செய்து, வரி செலுத்தி வரும் வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பதிவு சான்று பெற்றுள்ள வணிகர்களின் வணிக இடத்துக்கு வரும் அலுவ-லர்கள், மிக எளிமையான அடிப்படை தகவல்களை மட்டுமே கேட்பர். அதை வணிக இடத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் உடனே கூறி, அலுவலர்கள் தரும் படிவம்: 1ல் கையொப்பம் இட்டால், சில நிமிடத்தில் அப்பணி முடிந்து அடுத்த வணிக இடத்துக்கு செல்வர். அதனால் வியாபாரத்தில் எந்த இடையூறு, கால விரயம் ஏற்படாது. அதனால் சங்கங்களை சேர்ந்த வணி-கர்கள், தெரு தணிக்கை பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்மூலம் போலி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் செயல்படும் வணிகர்களை அடையாளம் காண வணிகர் சங்-கங்கள் உதவ வேண்டும். இதில் இடையூறு, சந்தேகம் ஏற்-பட்டால், 94439 - 64040, 94423-64040 என்ற எண்களில் தகவல் தெரிவித்தால், உடனே களையப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை