உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மரச்சிற்ப தொழில் செய்கின்றனர். அவர்களுக்கு சிற்பக்கலைக்கூடம் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது. அதில் நாகியம்பட்டியில், தமிழக கைத்தொழில் வளர்ச்சி கழகத்துக்கு(பூம்புகார்), நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக, நில அளவீடுக்கு நேற்று, சென்னை பூம்புகார் நிறுவனத்தில் இருந்து வந்தனர். அளவீடு செய்தபோது, நாகியம்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், போலீசார் பேச்சு நடத்தினர்.தாசில்தார், 'அரசு தரிசு நிலம் என்பதால், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். பணியை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார். இதனால் மக்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ