உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புட்டிப்பால், பவுடர் பால் ஆபத்து தாய்ப்பால் வார விழாவில் தகவல்

புட்டிப்பால், பவுடர் பால் ஆபத்து தாய்ப்பால் வார விழாவில் தகவல்

சேலம், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. டீன் மணிகாந்தன்(பொ) தொடங்கி வைத்தார். டீன் அலுவலகம் அருகில் புறப்பட்ட ஊர்வலம், முக்கிய சிகிச்சை பிரிவுகள் வழியே சென்று மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவ பிரிவில் நிறைவடைந்தது.ஊர்வலத்தின்போது, 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் உணவு, புட்டிப்பால், பவுடர் பால் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர்.மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் கோபிநாத், இணை பேராசிரியர் கனிமொழி, செவிலியர்கள், செவிலியர் பள்ளி மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் அனைவரும் தாய்ப்பால் வார விழா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ