உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இயந்திர பறவை பொருட்காட்சி கண்டுகளிக்க அழைப்பு

இயந்திர பறவை பொருட்காட்சி கண்டுகளிக்க அழைப்பு

சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, குஷி என்டர்டைன்மென்ட் நடத்தும் இயந்திர பறவைகள் பொருட்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, ஜூன், 9 வரை நடக்கிறது.இதுகுறித்து, 'எக்ஸ்போ' ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: சேலத்தில் இயந்திர பறவைகள் பொருட்காட்சியில் பென்குயின், கிளி, ஆந்தை, மயில், கொக்கு, வாத்து, நாரை, மரங்கொத்தி பறவை, குருவிகள், புறா, யானை சிங்கம், புலி போன்ற எண்ணற்ற இயந்திர பறவைகளை செயற்கையாக வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் ஸ்டால், அங்காடி பொருட்களை ஷாப்பிங் செய்து பயன் பெறலாம்.பெரியோர், சிறுவர்கள், பிரத்யேக ராட்டினங்களில் ஏறி விளையாடுகின்றனர். உணவு தின்பண்டங்ககள், பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய பல்வேறு வகை பொருட்கள், ரோபோட்டிக் காட்டு விலங்குகள், மக்களை கவரும்படி மின்விளக்குகளால் ஒளிரவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இயற்கை பறவைகளின் பொருட்காட்சியை கோடை விடுமுறையில் கண்டு மகிழ வாருங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ