உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாகர்கோவில் - மும்பை ரயில் இயக்கத்தில் மாற்றம்

நாகர்கோவில் - மும்பை ரயில் இயக்கத்தில் மாற்றம்

சேலம்:நாகர்கோவில் - மும்பை ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:நாகர்கோவில் ஸ்டேஷனில் இருந்து, மே 31ல் புறப்படும் நாகர்கோவில் - மும்பை ரயில், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்துார் வழியே புனே ஜங்ஷன் வரை மட்டும் இயக்கப்படும். பொறியியல் பணியால், புனே முதல் மும்பை வரையான சேவை ரத்து செய்யப்படுகிறது. ஜூன், 1ல் கிளம்பும் மும்பை - நாகர்கோவில் ரயில், புனே ஜங்ஷனில் புறப்பட்டு, சேலம் வழியே நாகர்கோவிலை அடையும். மும்பை முதல் புனே வரையான சேவை ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி