உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவன விழா

கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவன விழா

மேட்டூர்;-மேட்டூர் கெம்பிளாஸ்ட் சன்மார் பிளான்ட், 1, 3, 4, 5, பவர் பிளான்ட் நிறுவன ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவன பிளான்ட், 3 வளாகத்தில், மனமகிழ் மன்றத்தில் நடந்த விழாவில், துணை தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். செயல் துணை தலைவர் கஜேந்திரன்(இயக்கம்) தலைமை வகித்தார். செயல் இயக்குனர் பாஸ்கரன், நிறுவனத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றிய ஊழியர்களை, குடும்பத்துடன் மேடைக்கு வரவழைத்து பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மனமகிழ் மன்றம் சார்பில் ஊழியர்களுக்கு நடத்திய கிரிக்கெட், கபடி, கைப்பந்து, இறகுபந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. துணை தலைவர் ஸ்ரீராம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் விவேக் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ