உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் முதல்வர் ஆட்சி: தி.மு.க., வேட்பாளர் மலையரசன்

எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் முதல்வர் ஆட்சி: தி.மு.க., வேட்பாளர் மலையரசன்

வாழப்பாடி;கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன், வாழப்பாடி ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது, வேட்பாளர் மலையரசன் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பல்வேறு மாநிலங்கள், முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை பின்பற்றுகின்றன. மகளிருக்கு உரிமைத் தொகை, அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்கள், மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் என பல்வேறு பணிகள் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாழப்பாடியில் உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தி, 400 ரூபாய் சம்பளம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு, கட்சி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில், எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையை பின்பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். சில தினங்களுக்கு முன் காங்., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்கள் உள்ளன. பா.ஜ., ஆட்சியை அகற்ற, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, வாழப்பாடி ஒன்றிய செயலர் சக்கரவர்த்தி, மாதேஸ்வரன், வாழப்பாடி பேரூர் செயலர் செல்வம், பேளூர் செயலர் சுப்ரமணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ