உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் கலெக்டர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் கலெக்டர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஆத்துார், : கெங்கவல்லியில் இருந்து ஆத்துாருக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அதில் கெங்கவல்லி முதல் கூடமலைக்கு, 8க்கு பதில், 10 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பயண சீட்டுகளுடன், கடந்த மே, 15ல், அப்பகுதி மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். இதனால் சில நாட்களுக்கு முன், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, தனியார் பஸ் உரிமையாளர், டிரைவர், கண்டக்டரை அழைத்து விசாரித்தார். அதில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினார். மே, 30ல் அதே பஸ்சில் பயணித்தவர்களிடம், கூடமலை - கெங்கவல்லி பயணச்சீட்டுக்கு பதில் கூடமலை - மஞ்சினி என சீட்டு கொடுத்து, 10 ரூபாய் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளதாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி கூறுகையில், ''கூடுதல் கட்டண வசூல் புகார் தொடர்பாக, பஸ் உரிமையாளர், டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்து, தனியார் பஸ் மீது நடவடிக்கை எடுக்க, சேலம் கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ