உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுாரில் இ.பி.எஸ்., தலைமையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஓமலுாரில் இ.பி.எஸ்., தலைமையில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஓமலுார்: லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, இ.பி.எஸ்., தலைமையில் ஓமலுாரில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.சேலம் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. மேலும், தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலுார், இடைப்பாடி, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு விழுந்த ஓட்டுக்கள், கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாநகர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, 'டோஸ்' விட்ட இ.பி.எஸ்., இன்று காலை, 10:00 மணிக்கு, ஓமலுாரில் உள்ள கட்சி அலுவலத்தில், புறநகர் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, சார்பு மன்ற நிர்வாகிகள், கிளை செயலர்கள் ஆகியோர்களை சந்தித்து, ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ