உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விமான நிலைய விரிவாக்கம் ஏக்கருக்கு ரூ.2 கோடி வழங்க கோரிக்கை

விமான நிலைய விரிவாக்கம் ஏக்கருக்கு ரூ.2 கோடி வழங்க கோரிக்கை

ஓமலுார்: விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், ஏக்கருக்கு, 2 கோடி ரூபாய் வழங்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி கிராமங்களில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அளவீடு பணி முடிந்த நிலையில், விவசாயிகளிடம், நில எடுப்பு குறித்து விரிவான ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.காமலாபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நேற்று, நில எடுப்பு தனி தாசில்தார்கள் பொன்னுசாமி, காந்திதேசாய் ஆகியோர், காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி கிராம மக்களை சந்தித்து, நில எடுப்பு சட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். பின் விவசாயிகள் கருத்துகளை கேட்டு பதிவு செய்து கொண்டனர்.இதுகுறித்து நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் சுகுமார் கூறியதாவது: அதிகாரிகள், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென அழைக்கின்றனர். டால்மியா அல்லது இரும்பாலையில் பல ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு விமான நிலையத்தை செயல்படுத்தலாம். இல்லை எனில் இங்கு கையகப்படுத்தப்படும் நில அளவுக்கேற்ப, இரும்பாலையில் உள்ள தரிசு நிலத்தை வழங்க வேண்டும். மீறி நிலத்தை கையகப்படுத்தினால், ஏக்கருக்கு, 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ