உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

சேலம்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத, பா.ஜ., அரசை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில், மாநகர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்-பினர். அதில் அனைவரும் கண்களில் கறுப்புத்துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். துணை மேயர் சாரதாதேவி, பொரு-ளாளர் ராஜகணபதி, மாநகர் துணைத்தலைவர் திருமுருகன் உள்-பட பலர் பங்கேற்றனர்.பட்டை நாமம்அதேபோல் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் காதில் பூ சுற்றி, கையில் பட்டை நாமம் கொண்ட பதாகை ஏந்தி, பா.ஜ., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஓசுமணி, ஆத்துார் நகர தலைவர் முருகேசன், மாவட்ட, நகர, வட்டார நிர்-வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ