| ADDED : மே 27, 2024 05:27 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சியில் இயற்கை வள பாதுகாப்பு சங்க கூட்டம் நேற்று நடந்தது. அமைப்பாளர் செல்வராசு தலைமை வகித்தார். அதில் துர்க்கை அம்மன் கோவில் அருகே உள்ள பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். அந்த ஏரியின் உபரி நீர் பாதையை சீரமைக்க வேண்டும்; பெரிய ஏரி, பாப்பான் குட்டை, ராஜன் குட்டை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கரை அமைக்க வேண்டும். அந்த, 3 ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதோடு, துார்வாரி மேட்டூர் உபரிநீரை தேக்கி, சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.