உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடி அரசு கல்லுாரியில் இன்று இறுதி கட்ட கலந்தாய்வு

இடைப்பாடி அரசு கல்லுாரியில் இன்று இறுதி கட்ட கலந்தாய்வு

இடைப்பாடி: இடைப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது. இளநிலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ், இணைய வழி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை, தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன், 10, பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், இணைய வழி விண்ணப்ப நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம், பெற்றோர் புகைப்படம், உரிய பாடத்திற்கு கல்வி கட்டண தொகையுடன் பங்கேற்க வேண்டும் என, இடைப்பாடி அரசு கல்லுாரி முதல்வர் தமிழரசி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ