உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹிந்து கோவில் சூறை: காஷ்மீரில் 12 பேர் கைது

ஹிந்து கோவில் சூறை: காஷ்மீரில் 12 பேர் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின், ரியாசி மாவட்டம், தர்மாரி பகுதியில் ஹிந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன் தினம் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களை அடித்து நொறுக்கி சென்றனர்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் கூட்டாக இணைந்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர்.நிலைமை மோசமானதால், ரியாசி துணை கமிஷனர் நேரில் வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். பின், அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 12 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ