| ADDED : ஆக 08, 2024 01:46 AM
தலைவாசல், தலைவாசல் அருகே கிழக்குராஜாபாளையத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி, 29. பி.ஏ., பி.எட்., படித்த இவர், திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, தொண்டைப்பாடியை சேர்ந்தவர் அகல்யா, 21. பி.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் உள்ளார். ஓராண்டுக்கு முன் ராஜபாண்டிக்கு, அகல்யாவை பெண் பார்க்கச்சென்றனர். அப்போது ஜாதக பொருத்தம் இல்லை என, பெண் வீட்டினர் கூறிவிட்டனர். பின் இருவரும் காதலித்தனர். இந்நிலையில் வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் இரு நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு வீரகனுார் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். பெண்ணின் பெற்றோர், திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் ராஜபாண்டியுடன், அகல்யாவை அனுப்பினர்.