உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு மருத்துவமனை வளாகத்தில் ஈக்கள் தொல்லையால் இம்சை

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஈக்கள் தொல்லையால் இம்சை

ஆத்துார்: ஆத்துார், காமராஜர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தின மும், 1,500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை, அதன் வளாக பகுதியில், 'ஈ'க்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அந்த ஈக்கள், சாப்பிடும்போதும், உணவுகள் மீது அமர்வதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு வருவோரை, 'ஈ'க்கள் உடலில் மொய்ப்பதால் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மருத்துவமனை சுகாதார பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறை, பாதை உள்ளிட்டவைகளில் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது. வெளிப்பகுதியில் ஈக்கள் உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ