உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைமறைவான மோசடி நபர் ஜாமின்தாரரிடம் விசாரணை

தலைமறைவான மோசடி நபர் ஜாமின்தாரரிடம் விசாரணை

சேலம்: தலைமறைவான மோசடி நபர் குறித்து, நிபந்தனை ஜாமினுக்கு உத்தரவாதம் அளித்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது என, போலீசார் தெரிவித்தனர்.சேலம், இரும்பாலை ஜாகீர்காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 36. இவர் கடந்த, 2013ல், சேலம் அழகாபுரம் ராம-கிருஷ்ணா சாலையில் சூர்யா ஈமு பார்ம்ஸ் தொடங்கி, 74 லட்-சத்து, 35 ஆயிரத்து, 946 ரூபாய் மோசடி செய்தார். இது தொடர்-பாக, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். விசாரணையில் ஈரோடு, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஈமு பார்ம்ஸ் தொடங்கி மோசடி செய்தது தெரிந்தது.இந்த வழக்கில், கைதாகி வெளிவந்த பின், அடுத்தடுத்து சம்மன் அனுப்பியும் சுரேஷ் ஆஜராகவில்லை. எனவே, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கோவை டான்பிட் நீதி-மன்றம், 2019ல், பிடிவாரன்ட் பிறப்பித்தது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடியும், ஆறு ஆண்டுகளாக சுரேஷ் தலைமறைவாக உள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால், 94434 - 26674, 94430 - 58288 என்ற எண்களில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். போலீசார் கூறுகையில், 'சுரேஷின் நிபந்தனை ஜாமினுக்கு உத்த-ரவாதம் அளித்த, தாரமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணன், 56, என்ப-வரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேல் நடவடிக்கை தொடரும்,' என்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை