சேலம் : சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கடந்த மே, 30ல் முதல் கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து திருமுறை பாராயணம், விஷேச சந்தி, பூத சுத்தி, கோபுர கலசங்கள் நிறுவுதல், ஸ்தபதி மரியாதை, விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், சூர்ய கும்ப பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, 4ம் கால யாக வேள்வி, தீபாராதனை நடந்தது.மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் நடந்தது. 5ம் கால யாக வேள்வி, 108 மூலிகைகளால் சிறப்பு யாகம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது.இன்று அதிகாலை, 3:30 மணிக்கு விநாயகர் பூஜை, 6ம் கால யாக வேள்வி, மூலமந்திர ஹோமம், அஸ்த்ர ஹோமம், ஜெயாதி ஹோமம், வஸ்த்ர சமர்ப்பணம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடக்கிறது. அதிகாலை, 5:00 மணிக்கு கடம் புறப்பாடு, 5:30 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் வினை தீர்த்த விநாயகர், ஆதி முனீஸ்வரர், மாரியம்மன், காளியம்மன், பாலதண்டாயுதபாணி சுவாமிகள், பரிவார தெய்வங்களுக்கு சம காலத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து தச தரிசனம், மஹா அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். மாலையில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது.