உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழ்வாதார இயக்க மகளிருக்கு இயற்கை வேளாண் பயிற்சி

வாழ்வாதார இயக்க மகளிருக்கு இயற்கை வேளாண் பயிற்சி

பனமரத்துப்பட்டி : சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த மகளிர் களப்பயிற்றுனர்களுக்கு இயற்கை வேளாண் குறித்து, 5 நாள் பயிற்சி, கடந்த, 10ல் தொடங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ரவி, கலைச்செல்வி, ஆனந்த், சந்திரசேகரன், கோகிலா ஆகியோர், இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரித்தல், ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம், கால்நடை பராமரிப்பு குறித்து விளக்கினர். பஞ்சகாவியம் தயாரித்தல், மண் மாதிரி சேகரித்தல், பூச்சி விரட்டி தயாரித்தல் பற்றி செயல்விளக்கம் அளித்தனர். நேற்று பயிற்சி நிறைவடைந்தது. 5 நாட்கள் பயிற்சி பெற்றவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தி, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்