உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவையில் நடந்த மாரத்தான் ஆட்டையாம்பட்டி மாணவர்கள் வெற்றி

கோவையில் நடந்த மாரத்தான் ஆட்டையாம்பட்டி மாணவர்கள் வெற்றி

வீரபாண்டி: போதை பொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி, கோவையில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ஒன்பது பேர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.சேலம் ஆட்டையாம்பட்டியில், 'லேசர் ரன்னர்ஸ்' அணி சார்பில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 43 வீரர்கள் போதை பொருள் விழிப்புணர்வுக்காக, கோவையில் நேற்று முன்தினம் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இவர்களில், 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அன்பரசு என்பவர் முதலிடம், காமராஜ் ஆறாமிடம், குமார் எட்டாமிடம் பிடித்தனர். 40 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சுகந்தி இரண்டாமிடம் பெற்றார். 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஜானகிராமன் இரண்டாமிடம், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் காவ்யா மூன்றாமிடம், தேவிகா ஆறாமிடம் பிடித்தனர். 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், இளமதி மூன்றாமிடம், தேவிகா ஆறாமிடம் பிடித்தனர். 10 வயது ஆண்கள் பிரிவில் சபரிநாத் ஒன்பதாமிடம் பிடித்தார். இளமதி, தேவிகா ஆகியோர் ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கின்றனர். சபரிநாத், நாச்சிப்பட்டி வித்யாமந்திர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவை தவிர ஐந்து மாணவ, மாணவிகள் கேரம் போர்டு போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றனர்.லேசர் ரன்னர்ஸ் அணி சார்பில் கலந்து கொண்ட, 43 பேரில், 13 பேர் பரிசு பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை