உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து 73,673 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்வரத்து 73,673 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறந்த உபரி நீர் தொடர்ச்சியாக வந்ததால், கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பி-யது. கடந்த, 2ல் அதிகபட்சமாக வினாடிக்கு, 1.71 லட்சம் கன-அடி உபரிநீர் வந்தது. நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு, 70,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை, 4:00 மணிக்கு, 73,673 கனஅடியாக சற்று உயர்ந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியே வினாடிக்கு, 21,500 கனஅடி நீர் திறக்கப்-பட்டது. தவிர கால்வாய் பாசனத்துக்கு, 500 கன அடி, உபரியாக, 16 கண் மதகில் வினாடிக்கு, 48,500 கன அடி நீர் வெளியேற்றப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை