உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர் இருப்பு ஓராண்டில் 50 டி.எம்.சி., சரிவு

மேட்டூர் அணை நீர் இருப்பு ஓராண்டில் 50 டி.எம்.சி., சரிவு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த ஆண்டு ஜூன், 12ல் அணை நீர்மட்டம், 103.35 அடியாக இருந்ததால், முதல்வர் ஸ்டாலின், டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.கடந்த ஆண்டு ஜூன், 19ல் அணை நீர்மட்டம், 98.98 அடி, நீர்இருப்பு, 63.52 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 454 கனஅடி நீர் வந்த நிலையில் டெல்டா பாசனத்துக்கு, 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு பின் நேற்று, அணை நீர்மட்டம், 41.91 அடி, நீர் இருப்பு, 13.09 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 114 கனஅடி நீர் வந்தது.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. நடப்பாண்டு நீர்மட்டம் குறைவாக இருந்ததால் கடந்த, 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன், 19 அன்று ஒப்பிடுகையில், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 57 அடி, நீர் இருப்பு, 50 டி.எம்.சி., குறைவாக உள்ளது. இது டெல்டா விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ