உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் உபரிநீர் திறப்பு நிறுத்தம் 16 கண் மதகு ஷட்டர் மூடல்

மேட்டூர் உபரிநீர் திறப்பு நிறுத்தம் 16 கண் மதகு ஷட்டர் மூடல்

மேட்டூர்:மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு, எட்டு நாட்களுக்கு பின் நிறுத்தப்பட்டதால், 16 கண் மதகு ஷட்டர்கள் மூடப்பட்டன.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்து, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. அந்த அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது.இதனால் கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் அன்று முதலே, 16 கண் மதகு வழியே உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த, 2ல் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு, 1.71 லட்சம் கனஅடி நீர் வந்தது. கடந்த, 31 இரவு முதல், 2 காலை வரை, வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. பின் கர்நாடகா அணைகளில் உபரிநீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. அந்த நீர், மின் நிலையங்கள் வழியே காவிரியில் வெளியேற்றப்பட்டது.இதனால் உபரிநீர் திறப்பு, எட்டு நாட்களுக்கு பின் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நிறுத்தப்பட்டு, 16 கண் மதகு ஷட்டர்கள் மூடப்பட்டன. மதகில் சிக்கிய மீன்கள்உபரிநீர் நிறுத்தப்பட்டதால், 16 கண் மதகில் நேற்று காலை சிறு, சிறு பள்ளங்களில் தேங்கி நின்ற நீரில் மீனவர்கள் வலைவீசி மீன் பிடித்தனர். திலேப்பியா மீன்கள் அதிகளவில் பிடிபட்டன. ஒரு மீனவர் வலையில் தலா, 10 கிலோ எடையில், இரு வாளை மீன்கள் சிக்கின.நாய்கள் வெளியேற்றம்மேட்டூர் அணை உபரிநீரால், ஏழு நாய்கள் சிக்கி தவித்தன. அந்த நாய்களுக்கு சில நாட்களாக டிரோன் மூலம் உணவு வழங்கப்பட்டது. நேற்று மதகில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் தீயணைப்பு, மீட்பு குழுவினர், கால்நடை மருத்துவர்கள், அங்கு முகாமிட்டிருந்த நாய்களை, கரைக்கு விரட்டினர். இதனால் ஒரு வாரமாக தவித்த நாய்கள், கரைக்கு சென்றன.நீர் திறப்பு குறைப்புஇரு நாட்களாக மழை குறைந்ததால் கர்நாடகா அணைகளின் நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,547 கனஅடியாக இருந்த கபினி நீரவரத்து, நேற்று, 7,359 கனஅடியாகவும், வினாடிக்கு, 16,400 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து நேற்று, 13,734 கனஅடியாகவும் சரிந்தது.இரு அணைகளில் இருந்து கால்வாய் பாசனம் போக மீதம், 8,000 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி