உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / என்.டி.ஏ., கூட்டணி வெற்றி பெறும்:அமைச்சர் நேரு வீடியோ வைரல்

என்.டி.ஏ., கூட்டணி வெற்றி பெறும்:அமைச்சர் நேரு வீடியோ வைரல்

ஆத்துார்;'என்.டி.ஏ., கூட்டணி வெற்றி பெறும்' என, அமைச்சர் நேரு தவறுதலாக கூறிய வீடியோ பரவிவருகிறது.பெத்தநாயக்கன்பாளையத்தில், வரும், 30ல், சேலம், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.அங்கு மேற்கொள்ளும் பணி குறித்து, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்' என்பதற்கு பதில், 'என்.டி.ஏ.,' கூட்டணி(தேசிய ஜனநாயக கூட்டணி - பா.ஜ., கூட்டணி) வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என தவறுதலாக பேசிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி