| ADDED : ஆக 20, 2024 03:22 AM
வீரபாண்டி: குறுமைய அளவிலான, ஆண்கள் வளையப்பந்து போட்டியின் மூன்று பிரிவுகளிலும், நெய்காரப்பட்டி அரசுப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பாண்டுக்கான பாரதியார் தின விளையாட்டு போட்டி, குறுமையங்கள் அளவில் கடந்த ஜூலையில் துவங்கி நடந்து வருகிறது. சேலம் பனமரத்துப்பட்டி குறுமைய அளவில், ஆண்கள் வளையப்பந்து போட்டி நேற்று நெய்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என மூன்றிலும் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடந்த போட்டிகளில் இளம்பிள்ளை அரசுப்பள்ளி, மல்லுார் அரசுப்பள்ளி, நெய்காரப்பட்டி அரசுப்பள்ளி, வேம்படிதாளம் அரசுப்பள்ளி என நான்கு அணிகள் பங்கேற்றன. மூன்று பிரிவுகளிலும் ஒற்றையர், இரட்டையர் என அனைத்து போட்டிகளிலும் நெய்காரப்பட்டி அரசுப்பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. 14 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் இளம்பிள்ளை அணி இரண்டாமிடம், 17 வயது ஒற்றையர் இரட்டையர் பிரிவுகளில் மல்லுாரி அரசுப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. 19 வயது பிரிவு ஒற்றையர் பிரிவில் மல்லுார் அணியும், இரட்டையர் பிரிவில் இளம்பிள்ளை அணியும் இரண்டாமிடத்தை பிடித்தது. ஏற்பாடுகளை நெய்காரப்பட்டி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.