உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதிய பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

போதிய பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையில் ஜவுளி, அதன் சார்பு தொழில் பிரதானமாக உள்ளது. அதனால் தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் இளம்-பிள்ளை வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி, தாரமங்கலம், மேட்டூர், ஜலகண்டா-புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. மேலும், 3 அரசு பள்ளிகள் இளம்பிள்ளையில் உள்ளதால், மாணவர்கள் பஸ்சுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.சிலர் வேறு வழியின்றி மினி ஆட்டோவில் பயணிக்கின்றனர். ஆட்டோ டிரைவர்கள், அதிகளவில் பயணியரை ஏற்றி, வேகமாக ஓட்டிச்செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, போதிய எண்ணிக்கையில் பஸ்களை இயக்க, அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை