உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று ஆடிப்பெருக்கு விழா குளிக்கும் இடங்கள் அறிவிப்பு

இன்று ஆடிப்பெருக்கு விழா குளிக்கும் இடங்கள் அறிவிப்பு

சேலம், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் இடைப்பாடி வட்டத்தில் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி கிழக்குக்கரை கால்வாய்; ஓணாம்பாறை கால்வாய்; நெடுங்குளம் மாம்பாடியூர்; வெள்ளரிவெள்ளி மாணிக்கம் பாலத்தார் மோரி ஆகிய இடங்களில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மேட்டூர் வட்டத்தில் கொளத்துார் செட்டிப்பட்டி; கோட்டையூர்; பண்ணவாடி; மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில்; காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை; எம்.ஜி.ஆர்., பாலம்; திப்பம்பட்டி; கீரைக்காரனுார்; கூணான்டியூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை தவிர வேறு இடத்தில் மக்கள் ஆற்றில் இறங்கவோ, நீராடவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.ஆடிப்பெருக்கையொட்டி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, வருவாய், போலீஸ் துறைகள், இடைப்பாடி, மேட்டூர் நகராட்சிகள், தீயணைப்பு மீட்புப்பணிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நின்று வேடிக்கை பார்ப்பது, கரையில் நின்றபடி புகைப்படம், 'செல்பி' எடுத்தல், ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தல், குழந்தைகளை தனியே குளிக்க அனுமதிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கரையோர மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை