உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ம.க., போஸ்டர் கிழிப்பு; அ.தி.மு.க., மீது அதிருப்தி

பா.ம.க., போஸ்டர் கிழிப்பு; அ.தி.மு.க., மீது அதிருப்தி

ஓமலுார்: பா.ம.க., சார்பில் நடக்க உள்ள, 'சோழ மண்டல மாநாடு' குறித்த போஸ்டர், காடையாம்பட்டி, பண்ணப்பட்டி மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த போஸ்டரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிழித்துள்ளனர். இதை அறிந்த, பா.ம.க., நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரித்தபோது, அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் கிழித்தது தெரிந்தது. இதுகுறித்து ஓமலுார் எம்.எல்.ஏ., மணியிடம், பா.ம.க.,வினர் புகார் தெரிவித்தனர். ஆனால் இச்சம்பவத்தால் அ.தி.மு.க.,வினர் மீது பா.ம.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி